கல்வி | கல்வி | 2021-07-13 11:09:14

ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு.

பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழக்கும் நடவடிக்கையின் பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை
ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டங்கள் இன்று (12) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கொழும்பு வலயத்திற்கு உட்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 242,000 ஆசிரியர்கள் உள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலோருக்கு ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts