உள்நாடு | கல்வி | 2021-07-12 16:39:22

மருதமுனை ஸம்ஸ் தேசிய பாடசாலையில்,  டெப் (Tab) வசதிகளை மாணவர்களுக்கு வழங்கும் திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது

(ஏ.எல்.எம்.ஷினாஸ் )

மருதமுனை ஸம்ஸ் தேசிய பாடசாலையில் அரசாங்கத்தின்  இலவச டெப் வசதிகளை மாணவர்களுக்கு வழங்கி கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (12) பாடசாலையின் அதிபர் ஏ.எல்.சக்காப் தலைமையில் நடைபெற்றது.


Covid-19 கொரோனா தொற்று நோய் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் தற்போது இணையவழியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் இணைய வழிமுகைளை பெற்றுக் கொள்ள வசதியற்ற மாவர்களுக்கு இணைய உலகில் பிரவேசிப்பதற்கென இலவசமாக அரசாங்கத்தினால் டெப் (Tab) வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

இத்த வேலைத்திட்டத்தின் கீழ் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இணையவழி கற்பித்தல் முறையை அறிமுகப்படுத்தி கற்றல் செயற்பாடு ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்காக கல்முனை வலயக்கல்வி அலுவலகம் ஊடாக கடந்த வாரம் 50 டெப்கள் (Tab) இந்தப் பாடசாலைக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கல்லூரியின் பிரதி அதிபர்களான எம்.எம்.ஹிர்பகான், எம்.ஐ.சம்சுத்தீன் உதவி அதிபர்களான எம்.பி.ஏ.ராஜி, எச்.எம்.நியாஸ், பகுதித்தலைவர் ஈ.கமால்தீன், தொழில்நுட்ப நிகழ் நிலை இணைப்பாளர் ஆர்.எம்.சியாம், தொழில்நுட்ப உதவியாளர் எ.ஜெ.எ.ஆஹாஸ் ஆகியோருடன் குறிப்பிட்ட முக்கியஸ்தர்கள் மாத்திரம் கலந்து கொண்டனர்.
 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts