பிராந்தியம் | மருத்துவம் | 2021-06-30 15:59:48

மருதமுனை பிரதேசத்தை முழுமையாக முடக்க தீர்மானம்

(சர்ஜூன் லாபிர், ஹூதா உமர்)

மருதமுனை பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மருதமுனை பிரதேசத்தை நாளை (1) திகதி முதல் முழுமையாக முடக்க (Lockdown) இன்று(30) நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 01ம் திகதி இரவு 10.00 முதல் எதிர்வரும் புதன்கிழமை 07 ஆம் திகதி காலை 06.00 மணிவரைக்கும் மருதமுனை பிரதேசத்திற்கு வெளியில் இருந்து பொதுமக்கள் உட் பிரவேசிப்பதும் வெளியேறுவதும் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

முடக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மருதமுனை பிரதேசத்தில் இருந்து கொரோனாவினை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
 

உயர்மட்டக் கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன்,கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப் ரகுமான்,கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி,மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.அமீர், எம்.எஸ் உமர் அலி, எம்.எஸ்.எம்.நவாஸ், பி.எம்.சிபான்,கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சாத் காரியப்பர், உட்பட வைத்தியர்கள், மருதமுனை வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், உலமா சபை பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts