உள்நாடு | அரசியல் | 2021-06-22 09:45:48

எதிர்ப்பா? ஆதரவா? TNAயின் முடிவு இன்று

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக கூட்டமைப்பு இதுவரை எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் தொடர்பில் முடிவு செய்யப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இதேவேளை எரிபொருள் விலையேற்றம் தொடர்பான அரசாங்கத்தின் முடிவை கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts