உள்நாடு | மருத்துவம் | 2021-06-21 19:42:27

அம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினால் 5 லட்சம் நிதியுதவி !!

-நூருள் ஹுதா உமர்-

அம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு சிகிச்சை உபகரணங்கள் கொள்வனவு செய்ய சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினால் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் கொரோணா அலையின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவின் தேவை வெகுவாக மக்கள் மத்தியில் உணரப்பட்டு வருகிறது. இந்த தேவையை பூர்த்தி செய்ய தமது பங்களிப்பை செய்யும் நோக்கிலையே சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினால் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்க தலைவர் எம்.எஸ்.எம். முபாரக், பொதுச்செயலாளர் எம்.எப். அப்துல் வாஸித்,  பிரதம பொருளாளர் எம்.எம்.ஏ. றஹீம், நிறைவேற்று செயற்குழு உறுப்பினர்களான கல்முனை மாநகர சபை உறுப்பினர் என்.எம். றிஸ்மீர், ஏ.சி. இக்பால், எஸ்.எச். இக்பால் அடங்கிய குழுவினர் இந்த உதவித்தொகையை அம்பாறை பொது வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் உபுல் விஜயநாயக்கவிடம் வழங்கி வைத்தனர். 

இந்நிகழ்வில் அம்பாறை பொது வைத்தியசாலை பிரதி செயலாளர் என்.ஜி. சி. குணரத்ன, அம்பாறை மாவட்ட திறன்வான்மையாளர்கள் சங்க தலைவர்,  வைத்தியசாலை அதிகாரிகள், தாதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts