உள்நாடு | சமூக வாழ்வு | 2021-06-18 16:20:24

அக்கரைப்பற்று பிரதேச மட்ட கோவிட் 19 கட்டுப்பாட்டு குழுக்கூட்டம்.

-நூருல் ஹுதா உமர் -

அக்கரைப்பற்று பிரதேச மட்ட கோவிட் 19 கட்டுப்பாட்டு குழுக்கூட்டம் வியாழக்கிழமை அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் .எப்.எம்.ஏ.காதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது 

அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக், அக்கரைப்பற்று  பிரதேச செயலாளர், பொலிஸ் உயரதிகாரி மற்றும் பாதுகாப்பு படையின் 49 வது படைப்பிரிவின் உயர் அதிகாரிகள், பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதி  வர்த்தக சங்க பிரதிநிதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு நாடு தழுவிய ரீதியில் கொரோனா பெரும் தொற்று அதிகரித்து காணப்படும் இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணமும் வெகுவாக பாதித்து வருகிறது. அதன் விளைவாக அக்கரைப்பற்று பிராந்தியத்தில் கோவிட் 19 அபாயத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் சுகாதார வழிமுறைகள் பற்றி இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டு முக்கிய தீர்மானங்கள் சில எடுக்கப்பட்டது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts