பிராந்தியம் | மருத்துவம் | 2021-06-17 16:31:59

கல்முனையில் சுகாதாரத் துறையினர் வீதிக்கிறங்கி திடீர் பரிசோதனை செய்தனர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுனன் தலைமையிலான குழுவினர்  பெரியநீலாவனை தொடக்கம் சாய்ந்தமருது வரையிலான பகுதியில் உள்ள பிரதான வீதிகளில் பயணம் செய்த வாகனங்களை பரிசோதனை செய்து உரிய அனுமதிப்பத்திரம் இன்றி பயணித்தவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதுடன்  சிலருக்கு வழக்குகளும் பதிவுசெய்தனர்.

கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்று தீவீரமடைவதை தொடர்ந்து அதனை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கை தொடரப்பட்டதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார். இந்த அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்தேர்ச்சையாக கல்முனை பிராந்தியம் முழுவதுமாக நடைபெறவுள்ளது. எனவும் தெரிவித்தார்.


திடீர் கண்காணிப்பு நடவடிக்கையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி உட்பட பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் இராணுவத்தினர் என பலரும் கலந்து கொண்டர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts