வெளிநாடு | பொருளாதாரம் | 2021-06-17 12:51:24

வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட்: ஜப்பான் அரசு முடிவு

உலக நாடுகளில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க பல்வேறு நாட்டு அரசாங்கங்களும் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன.

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு சர்வதேச அளவிலான விமான சேவை பாதிப்படைந்தது.  இதனால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

வெளிநாடு செல்லும் பயணிகள் கொரோனா பாதிப்பில்லா சான்றிதழை தங்களுடன் கொண்டுவர வேண்டும் என்று பல நாடுகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டு வந்தது.  இந்நிலையில், தடுப்பூசிகள் போட தொடங்கிய சூழலில் அதனை விமான நிறுவனங்கள் முன்னிறுத்த தொடங்கியுள்ளன.

வெளிநாட்டு பயணிகளில் தடுப்பூசி போட்டு கொண்டு வருபவர்களுக்கு பல நாடுகள் முன்னுரிமை அளித்து வருகின்றன.  இதனை முன்னிட்டு, ஜப்பான் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய பயணிகளின் வசதிக்காக, தேவைப்படும் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நடைமுறை அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என ஜப்பானிய அரசின் செய்தி தொடர்பு அதிகாரி கத்சுனோபு கட்டோ தெரிவித்து உள்ளார்.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts