பிராந்தியம் | அரசியல் | 2021-06-12 15:44:11

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறார் : சட்டத்தரணி அலறி றிபாஸ்

-நூருல் ஹுதா உமர்-

முன்னாள் ஜனாதிபதி மைத்ரி பாலசிரிசேன, மொறகஹகந்த நீர்த்தேக்க திட்டம், ஆசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலைத் திட்டம்  ஆகிய இரு அபிவிருத்தி திட்டங்கள் மூலமாகவும் அரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமை, ரணிலை பிரதமர் கதிரையிலிருந்து அகற்றியமை, மத்தியவங்கி ஊழல் ஆணைக்குழுவை அமைத்தமை போன்ற அதிரடி அரசியல் நடவடிக்கைகள் மூலமாக அரசியல் அரங்கில் அழியாத தடம் பதித்தவர் என கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் தொடர்பில் இன்று (12) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், ஸ்ரீ.ல.சு.கட்சியை இன்றைய ஐ.தே.கட்சியை போல பலயீனப்படுத்திவிடாமல் கட்டிக்காத்த பெருமை அவரையே சாரும் எச்சந்தர்பத்திலும் தனது கட்சி சகாக்களை கைவிடவில்லை அமைச்சுப்பதவிகளை கொடுத்து அலங்கரித்து வைத்திருந்தார். கட்சி என்பதை கண்ணியமிக்கதாக கருதினார்  தேசிய அரசியல்  களத்தில் இன்னொரு மற்றம் நிகழுமாயினும்  அதுவும் மைத்ரி தலைமையிலான 15 பாராளுமன்ற மன்ற பிரதிநிதிகள் மூலமாகவே நிகழலாம்.
 
ஆயிரம் பேர் ஆயிரம் கருத்து நையாண்டியாக சொன்னாலும் மைத்ரி ஒரு அதிரடி அரசியல்வாதிதான்
இன்று மக்களுக்கான திட்டமொன்றை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார். காரியத்தில் கண்ணாக இருந்து கருமமாற்றி இருக்கிறார். இந்த நேரத்தில் அவரை பாராட்டுவது சாலப்பொருத்தம் மைத்திரி இலங்கை அரசியலில் நேற்றும், இன்றும், நாளையும் தவிர்க்க முடியாத சக்தி என்று குறிப்பிட்டுள்ளார்.
 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts