ஆரோக்கியம் | மருத்துவம் | 2021-06-12 15:42:32

பொது மக்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் சாய்ந்தமருதில் ஆரம்பம்.

-நூருல் ஹுதா உமர்  -

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச பொது மக்களுக்கான தடுப்பூசி வழங்குவதற்கான நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டு, தெரிவுசெய்யப்பட்ட  உரிய பாடசாலை அதிபர்களுடன் தடுப்பூசியினை பொதுமக்களுக்கு வழங்குவது தொடர்பான திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

எதிர்வரும் தினங்களில் சாய்ந்தமருது பிரதேச பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் உரிய கிராம சேவகர் பிரிவு மக்களுக்கு பொருத்தமான பாடசலைகள் தெரிவு செய்யப்பட்டதுடன் அதிபர்களுடன் தடுப்பூசி வழங்குதல் தொடர்பான கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார், அலுவலக உத்தியோகத்தர்கள், தெரிவுசெய்யப்பட்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts