உள்நாடு | சமூக வாழ்வு | 2021-06-11 23:07:19

சமாதான நீதவானாக அக்கரைப்பற்று எம்.ஐ.எம். சஹாப்தீன் நீதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

-நூருல் ஹுதா உமர்-

இலங்கை முழுத்தீவுக்குமான சமாதான நீதவானாக ஓய்வு பெற்ற இலங்கை கல்விநிர்வாக சேவை அதிகாரி முஹம்மட் இப்ராலெப்பை முகம்மட் சஹாப்தீன் (அன்ஸார் சேர்) அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச். முஹம்மட் ஹம்ஸா அவர்களின் முன்னிலையில் கடந்த 31.05.2021 ஆம் திகதி சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகா வித்தியாலயத்திலும் (தற்போது தேசிய பாடசாலை), அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியிலும் ஆரம்பக்கல்வியை கற்ற இவர் காத்தான்குடி முஸ்லிம் மத்திய கல்லூரியில்  உயர்கல்வியை கற்றுக்கொண்டதுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தன்னுடைய வணிகத்துறை பட்டப்படிப்பை முடித்துள்ளதுடன் பட்ட மேற்படிப்பை கல்வி டிப்ளோமாவிலும் நிறைவுசெய்துள்ளார். இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் மூன்றை சேர்ந்த இவர் தனது ஆரம்ப பாடசாலைகளான அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகா வித்தியாலயத்தில் ஒரு தசாப்தகாலமும், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் ஏழு வருடங்களும் அதிபராக கடமையாற்றி 39 வருட அரச கல்விசேவையிலிருந்து ஓய்வு பெற்றவராவார்.

அதிபர்களுக்கான அரச பிரதீபா பிரபா விருது உட்பட பல விருதுகளையும், கௌரவங்களையும் பெற்றுள்ள இவர் பிராந்தியத்தின் சிறந்த சமூகசேவகராகவும், பிரபல உயர்தர வர்த்தகப்பிரிவு ஆசிரியராகவும் விளங்குவதுடன் அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts