பிராந்தியம் | கல்வி | 2021-06-04 14:41:12

சாய்ந்தமருது மழ்ஹருஸ்  ஷம்ஸ் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.!

-கலீல் எஸ்.முஹம்மத்-

நாடளாவிய ரீதியில் ஆயிரம் தேசிய பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயமும் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கல்லூரியின் முதல்வர் அதிபர் அல்-ஹாஜ். எம்.எஸ்.எம்.ஐ.மதனி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதங்கள் இம்மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் உரிய பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

தேசிய பாடசாலைகளாக உள்வாங்கும் அரசின் வேலை திட்டத்தின் கீழ் பல பாடசாலைகள் தரமுயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு உட்பட எந்தவொரு பாடசாலையும் உள்வாங்கப்படாத நிலையில் இது குறித்து அக் கல்லூரியின் அதிபர் அல்-ஹாஜ். எம்.எஸ்.எம்.ஐ. மதனி அவர்களால் கிழக்கு மாகாணக்  கல்விப்  பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் அவர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு கிழக்கு மாகாண ஆளுநர் அணுராதா யஹம்பத் அவர்களின் விஷேட அணுசரணையுடன் தேசிய பாடசாலையாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டதன் பேரில் சாய்ந்தமருது மழ்ஹருஸ்  ஷம்ஸ் மகா வித்தியாலயமும் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இப்பெரு முயற்சிக்கு அர்ப்பணிப்புடன் முழுமையான  பங்களிப்பு வழங்கிய மாகாணக்  கல்விப்  பணிப்பாளர் நிஸாம் அவர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் அணுராதா யஹம்பத் அவர்களுக்கும் விசேட நன்றியறிதலை கல்லூரி அதிபர் மதனி அவர்கள் தெரிவிப்பதோடு கல்முனை வலய கல்வி பணிப்பாளர் உட்பட கல்லூரியின் முகாமைத்துவ குழு உறுப்பினர்கள், பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஆகிய அனைவருக்கும்  நன்றியினை தெரிவிப்பதாகவும் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts