உள்நாடு | சமூக வாழ்வு | 2021-05-30 17:57:52

காரைதீவு தவிசாளரினால் அம்பாறை மாவட்ட வலுவிழந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி

(ஹுதா உமர்)

கொரோனா நாட்டில் பரவலாக பரவிவரும் இந்த சூழ்நிலையில் நாட்டில் அடிக்கடி அமுலுக்கு வரும் பயணத்தடையினால் தொழிலை இழந்த, நிரந்தர வருமானம் இல்லாத, வலுவிழந்த குடும்பங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான குடும்ப அங்கத்தவர்களை கொண்ட குடும்பங்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் என தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவுகள் வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலின் நெறிப்படுத்தலில் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்று வருகிறது.

வீட்டு பாவனைக்கு தேவையான அத்தியவசிய பொருட்கள் அடங்கிய சுமார் 2000 ரூபாய் அளவில் பெறுமதியான இந்த பொதிகள் இதுவரை 1500 க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் உறவுகளின் நிதியுதவியூடாக மேற்கொள்ளப்படும் இந்த வேலைத்திட்டம் இன்னும் விஸ்தரிக்கப்பட்டு மேலும் பலருக்கும் எதிர்காலத்தில் உதவ உள்ளதாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts