உள்நாடு | சமூக வாழ்வு | 2021-05-30 17:53:04

பாதையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயம்... இருவர் நிலை கவலைக்கிடம்.

இரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற பேருந்து
விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக இரத்தினபுரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேயிலைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களைக் ஏற்றிச் செல்லும் பேருந்தே இன்று காலை விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து விபத்தில் காயமடைந்தவர்கள் வத்துபிடிவல மற்றும் இரத்தினபுரி போதனா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts