உள்நாடு | சமூக வாழ்வு | 2021-05-16 15:46:20

"உதிரம் கொடுத்து உயிர் காக்க முன்வருவோம்” எனும் தொனிப்பொருளில்

-யூ.கே. காலித்தீன் -

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி  தட்டுப்பாடு நிலமையினைக் கருத்திற்கொண்டு றைடர் சைக்கிலிங் கழகத்தின் ஏற்பாட்டில் ”உதிரம் கொடுத்து உயிர் காக்க முன்வருவோம்” எனும் தொனிப்பொருளில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று (16) இரத்த வங்கியில் டாக்டர் ஐ. எல். டில்ராஸ் வானு தலைமயைில் இடம்பெற்றது.

உதிரம் கொடுத்து உயிர் காக்க முன்வருவோம் எனும் தொனிப்பொருளில் இடம் பெற்ற நிகழ்வானது நாட்டில் நிலவுகின்ற கொரோனா வைரஸ் தாக்கதினால் பயணக்க கட்டுபாடு நிலவும் தருனத்திலும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாட்டினை கருத்திற் கொண்டு கோவிட் 19 சட்ட திட்டங்களுக்குட்பட்ட வகையில் சமூக இடைவளி முறைமைகளை பின்பற்றி இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது வைத்தியர்கள், தாதியர்கள், இளைஞசர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் மும்மூரமாக ஆா்வம் காட்டியதை காணக்கூடியதாக இருந்தது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts