பிராந்தியம் | சமூக வாழ்வு | 2021-05-16 00:02:15

இரண்டாவது நாளாகவும் பயணத்தடை; கல்முனை நகரம் ஸ்தம்பிதம்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வியாழக்கிழமை 13 ஆம் திகதி இரவு 11.00 மணிதொடக்கம் தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிவரைக்கும் மூன்று தினங்களுக்கு நாட்டில்  பயணத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் நாட்டின் சகல பகுதிகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்து காணப்படுகின்றன.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் (15.05.2021) இரண்டாவது நாளாகவும் வர்த்தக நிலையங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்த நிலையில் காணப்பட்டன. 

அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்று வருகின்றன. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஒன்றிணைந்து விசேட வீதி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக உள்ளது. பிரதான நகரம் பொதுமக்கள் இன்றி இவ்வாறு வெறிச்சோடிப்போயுள்ளன.


பொதுமக்களின் நாளாந்த இயல்பு வாழ்கையும் முற்றாக தடைப்பட்டுள்ளன. மாவட்டத்தின் கரை வலை, ஆழ்கடல் மீனவர்கள் இன்றையதினம் கடலுக்கு செல்ல முடியாத நிலையையும் காணக்கூடியதாக இருந்தது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts