உள்நாடு | அபிவிருத்தி | 2021-05-05 13:45:32

கிரின்பீல்ட் மக்களின் முறைப்பாட்டை அடுத்து கள விஜயம் செய்த கல்முனை மாநகர சுகாதார குழு !

(ஹுதா உமர்)

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தின் பின்னால் தொடர்ந்தும் திண்மக்கழிவுகள் குவிக்கப்படுவது சம்மந்தமாக மக்களினால் பலதடவைகள் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து கல்முனை மாநகரசபையின் சுகாதாரக்குழு எ.ஆர். பஸீரா றியாஸ் தலைமையில் அங்கு கள விஜயமொன்றை இன்று மேற்கொண்டது.

குறித்த விஜயத்தில் கல்முனை மாநகரசபையின் சுகாதாரக்குழு உறுப்பினர்களான பீ.எம்.ஷிபான், சட்டத்தரணி என்.எம். அஸாம், நடராஜா நந்தினி மற்றும் மாநகர சபை அதிகாரிகள் மேற்பார்வை  ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டதோடு, குறித்த கழிவுகளை விரைவில் அப்புறப்படுத்துவற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த திண்மக்கழிவுகளின் மூலம் யானைகளின் தொல்லை, கட்டாக்காலி மாடுகள், தெருநாய்களின் தொல்லை ,தூர்நாற்றம் என பல்வேறு அசௌகரியங்களை கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் மக்கள் தினம் தினம் அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts