உள்நாடு | சமூக வாழ்வு | 2021-05-05 13:42:53

சாணக்கியனுடன் அம்பாறையில் உலாவந்த முஸ்லிம் பிரமுகர்கள் அமைதி காப்பது ஏன்? மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

(நவாஸ் சாஜித்)

இன்றைய பாராளுமன்ற உரையில் கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் சாணக்கியன் பேசிய விடயங்கள் தொடர்பிலும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை காரியாலயம் முஸ்லிங்களின் தேவைக்கானது என்றும், மட்டக்களப்பு மாவட்ட வலயக்கல்வி அலுவலகம் முஸ்லிங்களின் இனவாத செயல் என்றும் பேசியதையும் அவர்களின் (முஸ்லிங்களின்) தேவைக்கானது என்றும் அதை சாணக்கியன் போன்றோர்கள் தடுக்கவில்லை என்றும் வாதிட்டது நாம் எல்லோரும் அறிந்த விடயம். இது சகலதும் இப்படி இருக்க வடகிழக்கை இணைக்க கோரிக்கையும் முன்வைத்துள்ளார்.

இப்படி பச்சையாக இனவாதம் பேசும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களை அம்பாறை வீதிகளில் அண்மையில் உலா அழைத்துவந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நசீர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் ஷம்சுதீன், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பிலான நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹிர், அட்டாளைச்சேனை முன்னாள் தவிசாளர் அன்ஸில், கல்முனை மாநகர சபை உறுப்பினர் மனாப்  ஆகியோர் கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியாக்கவில்லை ஏன்? அவரின் இந்த கோரிக்கைகளை ஏற்று கொண்டதால் அமைதியாக இருக்கிறீர்களா? மேலே கூறிய கௌரவ மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள் உங்களின் நிலைப்பாடுகளை உடனடியாக மக்களுக்கு தெளிவுபடுத்த முன்வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாநகர உரிமைகளுக்கான அமைப்பு
கல்முனை 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts