உள்நாடு | அரசியல் | 2021-05-01 08:59:17

இரத்தமும் வியர்வையும் சிந்தும் தொழிலாளர்கள் கை ஓங்குக - ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் ஸர்மில் ஜஹான்

இரத்தமும் வியர்வையும் சிந்தும் தொழிலாளர்கள் கை ஓங்குக என  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் B.ஸர்மில் ஜஹான் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,

இன்று சர்வதேச தொழிலாளர் தினமாகும்  அதாவது உழைக்கும் மக்களின் தினம். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உழைக்கும் இலங்கையர்களுக்கு எனது தொழிலாளர் தின  வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

எதிர்பாராதவிதமாக தற்பொழுது உலகெங்கும் முகங்கொடுத்துள்ள நெருக்கடியான இந்த நிலைமையிலிருந்து எம்மை விடுவிக்க எம் நாடு உள்ளிட்ட முழு உலகிலும் இருக்கும் சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் இரவு பகலாக எமக்காக அளப்பரிய சேவையாற்றி வருகின்றனர் .

அவர்கள் இலங்கை உள்ளிட்ட முழு உலகையும் மீட்க எமக்காகச் செய்யும் மகத்தான அர்ப்பணிப்புக்காக இந்த தொழிலாளர் தினத்தில் அவர்கள் வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் ஊடாக அவர்களை மேலும் களைப்படையச் செய்யாமல் அவர்களுக்குச் சக்தியாக இருப்போம்.

சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட நாட்டுக்குச் சக்தியாக இருக்கும் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினருக்கும் முழு இலங்கையர்கள் சார்பிலும் எனது கௌரவமான பாராட்டுக்களையும்,  வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Popular Posts