உள்நாடு | சமூக வாழ்வு | 2021-04-29 18:36:28

குளிரூட்டப்பட்ட இடங்களில் பணிபுரிவது அதிக ஆபத்தானது.

குளிரூட்டப்பட்ட அலுவலகங்கள் அல்லது இடங்களில் கடமைகளைச் செய்யும்போது ஒருவர்
எப்போதும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொவிட்-19 நிலைமைகளுக்கு மத்தியில் மூடிய அறைகளுக்குள் தொழில் செய்வது மிகவும் ஆபத்தானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு நபர் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடியிருக்கும் ஒரு சிறிய அறையில் இருந்தால், குறிப்பாக குளிரூட்டப்பட்ட பகுதியில், இந்த நோய் மற்றொரு நபருக்கு பரவ அதிகம் வாய்ப்புள்ளது.

எனவே இது போன்ற இடங்களில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை முடிந்தவரை திறந்து வைக்குமாறு பரிந்துரைக்கிறோம்.

மேலும் அத்தகைய இடங்களில் முகக் கவசம் அணிவது, கைகளை சவர்க்கரமிட்டு கழுவுதல் போன்ற சுகாதார வழிகாட்டல்களை அவசியம் கடைபிடிக்குமாறும் வலியுறுத்துவதாக அவர் கூறினார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts