உள்நாடு | சமூக வாழ்வு | 2021-04-29 18:29:24

கல்முனை பிரதேச கொரோனா செயற்பாடு குழுவின் விசேட கூட்டம்

(சர்ஜுன் லாபீர்)

நாட்டில் தற்போது அதிகரித்து வருகின்ற கொரோனாவினை கல்முனை பிரதேசத்தில் கட்டுப்பாடுக்குள் கொண்டு வருவதற்கான  கல்முனை பிரதேச கொரோனா தடுப்பு செயற்பாடு குழுவின் உயர்மட்ட கூட்டம் இன்று(29) கல்முனை பிரதேட செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கல்முனை இராணுவ  மேஜர் சாந்த விஜேயகோன், கல்முனை கடற்படை  முகாம் பொறுப்பதிகாரி  மஹசேன் மொரேவேக, கல்முனை பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த,கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப் றகுமான்,கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் என்.ரமேஸ், கல்முனை அனைத்து பள்ளிவாசல் சம்மேளன தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.சி அன்சார்,கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,கல்முனை வலயக் பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.எச் ஜாபீர், கல்முனை தெற்கு பிரதம பொது சுகாதார பரிசோதகர் ஏ.எம்.பாரூக், கல்முனை வர்த்தக சங்கத் தலைவர் கே.எம். சித்தீக், கல்முனை மார்க்கட் வர்த்தக சங்க செயலாளர் எம்.கபீர் உட்பட கிராம சேவகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தற்போதைய சூழ்நிலையில் பெருநாள் காலமாக இருப்பதனால் பொது மக்கள் சுகாதார வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மீறுபவர்கள் மீதி கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதோடு முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதோடு பள்ளிவாசல்கள் ஊடாக இத் தகவல்களை பொதுமக்களுக்கு தெளிவு படுத்தி கொரோனாவினை  முழுமையாக கல்முனை பிரதேசத்திலிருந்து ஒழிப்பதற்கு இக் கூடத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts