கல்வி | கல்வி | 2021-04-14 21:15:51

நிந்தவூர் அல்-அஷ்ரஃக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் 

நிந்தவூர் வலய நிருபர் - ஏ.பி.அப்துல் கபூர் 

நிந்தவூர் அல்-அஷ்ரஃக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் 2021 ம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை(13) பாடசாலையினுள் அமையப்பெற்றுள்ள காசிமி கேட்போர் கூடத்தில் கல்லூரியின் அதிபர் ஏ. அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் 2021/2022 வருடத்திற்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பதவி வழித் தலைவராக பாடசாலை அதிபர் ஏ. அப்துல் கபூர், செயலாளராக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எப்.எச்.ஏ.ஷிப்லி அஹமட், உப தலைவராக அறூப் அர்சாத், தொழில் திணைக்களம், கல்முனை,  பொருளாளராக தென் கிழக்கு பல்கலைக்கழக உதவி நிதியாளர் எஸ். எச். சஹீத், உப பொருளாளராக ஆசிரியர் ஊடகவியலாளர் ஏ.பி. அப்துல் கபூர், உப செயலாளராக ரி.எம்.இன்சாப், முகாமைத்துவ உதவியாளர், வலயக் கல்வி அலுவலகம் கல்முனை 

உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாக 12 பேரும் தெரிவு செய்யப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Popular Posts