உள்நாடு | சமூக வாழ்வு | 2021-04-12 23:59:26

எனது சேவைகள் ஒரு பிரதேசத்தற்க்கு மட்டுப்படுத்தப்படடதல்ல அனைவரையும் ஒன்றினைத்தே எனது சேவைகளை மேற்கொண்டு வருகின்றேன்-றிஸ்லி முஸ்தபா

(எம்.என்.எம்.அப்ராஸ்)

நான் மக்களுக்கு இன மத பேதம் இல்லாமல் சேவையாற்றி வருகின்றேன் சேவை செய்யும்  போது  இங்குள்ள மாவட்ட அரசியல் வாதிகள் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர் ஆனாலும் நான் இதனை பொருட்படுத்தாமல் எனது சேவை தொடர்ந்து முன்னெடுத்து  கொண்டே இருக்கும்


அம்பாறை மாவட்டத்தை அபிவிருத்தி மிக்கதாய் மாற்றுவதுவதுடன்   குறிப்பாக கரையோர பிரதேசங்களை  செழிப்புமிக்கதாகவும் இலங்கையின் மதிப்புமிக்க பகுதியாக மாற்றுவேன் என ஸ்ரீ  லங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி முக்கியஸ்தகரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினர் றிஸ்லி முஸ்தபா அவர்கள்

கல்முனையில் கடந்த  (11) அன்று மதியம் இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.



அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மாயோன் முஸ்தபாவின் புதல்வர்
றிஸ்லி முஸ்தபாவின் அரிசியல் பிரவேசம் மூலம் மக்களுக்கு  பல நல் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் , தனது அரசியல் பிரவேசம் சுமார் ஒரு வருடம் கடந்த
நிலையில்  தனது முயற்சியின் மூலம்  மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள்  தொடர்பில் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில்  ஊடகவியலாளர் சந்திப்பு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது .


ஊடக சந்திப்பில்
மேலும் கருத்து தெரிவித்த றிஸ்லி முஸ்தபா

அரசங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்து வேலைத்திட்டங்களும் மக்களுக்கு செல்ல வேண்டும் அண்மையில் எனக்கு வழங்கப்பட்ட கிழக்கு மகாண வீடமைப்பு அதிகார சபை உறுப்பினர் பதவி மூலம் மாவட்டத்தில்  வீடுகளுக்குக்கு நிதியுதவி வழங்கப்பட்டு திருத்தியமைக்கப்பட்டத்துடன்,அட்டாளைசேனை பகுதியில் எனது வேண்டுகோளின் பெயரில் மகாண வீடமைப்பு அதிகார சபை
தவிசாளரின் ஜனார்த்தனின் முயற்சியில்  கிழக்கு மாகாண ஆளுநரினால் கிழக்கு மகாண வீடமைப்பு அதிகார சபை  திறந்து வைக்கப்பட்டது.


மேலும் கல்முனை தொடக்கம் காரைதீவு பகுதி கார்பட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதுடன் ,ஏனைய பிரதேசங்களுக்கான வீதி அபிவிருத்தி செய்யப்படஉள்ளது ,

மாவட்டத்தின் உள்ள
மேலும் மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க
வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன் விரைவில் நாவிதன்வெளி  பகுதியில் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது .



இளைஞர் ,யுவதிகளின்
 விளையாட்டு துறையை மேம்படுத்தும் வகையில் பல வேலைதிட்டங்கள் மாவட்டத்தில்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது , தொடர்ந்தும் அது ஒவ்வொரு கட்டங்களாகஇடம்பெறவுள்ளது.

இளைஞர் ,யுவதிகளின் கல்வியினை மேம்படுத்தும் வகையில் சாய்ந்தமருதில் உள்ள  

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின்கிழக்கு மாகாண பிரதான காரியலயத்தை நவீன ரீதியான செயல் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும்

தெரிவித்தார் .

 

மேலும் எனது சேவைகள் ஒரு பிரதேசத்தற்க்கு மட்டுப்படுத்தப்படடதல்ல குறிப்பாக தமிழ் முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரையும்  ஒன்றினைத்தை எனது சேவைகளை மேற்கொண்டு வருகின்றேன் நான் பிரதேசவாதம் இனவாதம் பேசுவதில்லை நான் எப்போதும் இன ஐக்கியத்தை வலியுறுத்தியே செயல்படுகிறேன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் போதே நாட்டை கட்டியெழுப்ப முடியும்.





எனது தந்தையின் முயற்சியின் மூலம் இங்கு பல வேலைத்திட்டங்கள் மேற்கொண்டு வந்துள்ளார் என்பதை இங்குள்ள மக்கள் அறிவார்கள் இதன் மூலம் சிலர் அரசியல் லாபம் தேட சிலர் முயற்சிக்கின்றனர் ,எந்த தடைகள்  நடந்தாலும் எனது சேவை தொடரும். நான் தமிழ் ,முஸ்லிம் மக்களுக்கான குரலாகவே இருப்பேன் என தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதி ,பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சர்ளுக்கு நன்றியினையும் தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts