கல்வி | சமூக வாழ்வு | 2021-04-10 12:17:18

அக்கரைப்பற்று பிரதேசத்தில் மிகநீண்ட காலமாக மூடப்பட்டிருந்த கல்விக்கூடம் மீண்டும் சேவைக்கு திரும்பியது !

(ஹுதா உமர்)

புதிய கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டு மிக நீண்ட நாட்களாக இயங்காமல் இருந்த அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட இசங்கணிச்சீமை தாறுல் பிஹாம் பாலர் பாடசாலையை அக்கரைப்பற்று பிரதேச சபை  உறுப்பினர் ரீ எம் ஐய்யுப் அவர்களின் வழிநடாத்தலின் கீழ் இந்த வருடம் முதல் சிறப்பாக தொடர்ந்தும் நடத்தி  சொல்லும் நோக்கில் அப்பாலர் பாடசாலையின் வித்தியாரம்ப நிகழ்வு நடைபெற்று உத்தியோகப்பூர்வமாக நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அத்துடன் இந்நிகழ்வில் அல் / கமர் பாடசாலையில் இருந்து சென்ற வருடம் ஜனாதிபதி விருது (குரு பிரதீபா பிரபா) விருது பெற்ற ஆசிரியர் ஜனாப் பைசல் அவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், இசங்கணிச்சீமை பிரதேசத்திலிருந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அத்துடன் அந்த மாணவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்த ஆசிரியை திருமதி அஸ்மியாவும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார். மேலும் பட்டதாரி பயிலுனர்களாக அண்மையில் இப்பாடசாலைக்கு வருகை தந்த ஆசிரியர்களுக்கான வரவேற்பும் இந்நிகழ்வில் இடம்பெற்றது.

அல் / கமர் பாடசாலையின் அதிபர் ஜனாப் தாலிப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம் ஏ றாசிக் , அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ கே றொசின் தாஜ் , அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கரீமா , அக்கரைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ரீ எம் ஐய்யுப் ,  பிரதிக்  கல்விப் பணிப்பாளர் ஜனாப் அறபாத் , கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் கலீலுல் ரகுமான், அக்கரைப்பற்று  பாடசாலைகளின் அதிபர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், நலன்விரும்பிகள், கல்விமான்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts