விளையாட்டு | விளையாட்டு | 2021-04-05 23:18:14

Sports பொத்துவில் ப்ரன்ட்ஸ் இளைஞர் கழகம் கிரிக்கெட் போட்டியில் மாவட்ட போட்டிக்கு தகுதி!

(எம்.என்.எம்.அப்ராஸ்)

பொத்துவில் ப்ரன்ட்ஸ் இளைஞர் கழகம் கிரிக்கெட் போட்டியில் மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 33வது இளைஞர் விளையாட்டு போட்டியினை முன்னிட்டு பொத்துவில் பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டி பொத்துவில் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர்  கே. ஷமீர் தலைமையில் பொத்துவில் ஜலால்தீன் சதுக்க பொது மைதானத்தில் நடைபெற்றது.இதற்கமைய  கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றின்  இறுதிப் போட்டிக்கு ப்ரன்ட்ஸ் இளைஞர் கழகமும் ரொக் சலன்ஜஸ் இளைஞர் கழகமும் தகுதி பெற்றன

இதில் முதலில் துடுப்படுத்திடிய ரொக் சலன்ஜஸ் இளைஞர் கழகம் 5 ஓவர் நிறைவில்ற 2 விக்கெட்டுகளை இழந்து 33 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு தடுப்படுத்தாடிய ப்ரண்ட்ஸ் இளைஞர் கழகம் 1 ஓவர் மீதமிருக்க 2 விக்கெட்டுக்களை இழந்து ஓட்ட இலக்கை அடைந்து மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றது.


இந் நிகழ்வுக்கு
 பொத்துவில் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர்
எம்.ஏ.எம். நௌபல் மற்றும்  உறுப்பினர்கள்  நடுவர்களாக ஆசிரியர் தாஹா ரமலி பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான ஏ.எம்.எம்.சஹ்ரின் மற்றும் எம்.எஸ்.பர்ஷான் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts