வெளிநாடு | சமூக வாழ்வு | 2021-04-02 19:52:01

தாய்வான் ரயில் விபத்தில் 41 பயணிகள் பலி

தாய்வானில் இன்று ‍வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ரயில் விபத்தில் 41 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

தாய்வானின் தென் பிராந்திய நகரான தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரயில், ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை நெருங்கியபோது தடம் புரண்டது.

இந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாகவும், 62 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தாய்வானின் தேசிய தீயணைப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முறையாக பார்க்கிங் செய்யப்படாத லொறியொன்று சரிந்து தண்டவாளத்தில் விழுந்திருப்பதாகவும், அந்த லொறி மீது மோதியதால் ரெயில் தடம்புரண்டிருக்கலாம் எனவும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காயமடைந்த பெரும் எண்ணிக்கையானோருக்கு சிகிச்சையளிப்பதற்கு தயாராக இருக்குமாறு வைத்தியசாலைகளுக்கு தாய்வான் ஜனாதிபதி சேய் இங் வென் (Tsai Ing-wen) உத்தரவிட்டுள்ளார்.


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Popular Posts