வெளிநாடு | சமூக வாழ்வு | 2021-03-15 19:02:58

இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் மீது தடை விதிப்பது தொடர்பில் பாகிஸ்தான் கவலை வெளியிட்டது.

புர்கா மற்றும் நிகாப் மீது தடை விதிக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் கவலைகளை எழுப்பியுள்ளது.

இலங்கையில் பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் சாத் கட்டக் கூறுகையில், இலங்கையில் நிகாப் மீதான தடை உலகெங்கிலும் உள்ள சாதாரண இலங்கை முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு காயத்தை ஏற்படுத்தும்.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் நாடு எதிர்கொள்ளும் மற்றைய சவால்களால் இது இன்றைய பொருளாதார ரீதியாக கடினமான நேரத்தை மேலும் பாதிக்கும் என்று அவர் ட்விட்டர் மூலம் கூறினார்.

சனிக்கிழமை (13), பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, புர்காவை தடைசெய்யும் அமைச்சரவை உத்தரவில் கையெழுத்திட்டதாகக் கூறினார், அதற்கு இப்போது நாடாளுமன்ற ஒப்புதல் தேவை படுகிறது.

புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்வதற்கான முடிவு தேசிய பாதுகாப்பு விஷயங்களில் எடுக்கப்பட்டுள்ளது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்து இருந்தார்.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts