பிராந்தியம் | சமூக வாழ்வு | 2021-02-18 20:05:15

அம்பாறை மாவட்ட வலுவிழப்புடன் கூடிய நபர்களுக்கு சமூதாயம் சார்பான வேலைத்திட்டம்

(றாசிக் நபாயிஸ், ஏ.எல்.எம்.ஸினாஸ்)

அம்பாறை மாவட்டத்தில் 12 பிரதேச செயலகப் பிரிவுகளில் இலங்கை நவஜீவன நிறுவனத்தின்  ஊடாக வலுவிழப்புடன் கூடிய நபர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த செயற்றிட்டத்தின் கீழ் வலுவிழப்புடன் கூடிய நபர்களுக்கான சமூதாயம் சார்பான உட்படுத்தல் அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பான விழிப்புணர்வு வழங்கும்  நிகழ்வு  (16) நவஜீவன அம்பாறை மாவட்ட இணைப்பாளர், ரி.டி.பத்ம கைலநாதன் தலைமையில் கல்முனை கிறிஸ்தா இல்ல கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது.

நவஜீவன நிறுவனத்தின் பி.எம்.இசெட்(PMZ) செயற்றிட்டத்துக்கான தேசிய இணைப்பாளர் முதிர்ந்த குமார், கல்வி மேம்பாடு அதிகாரி பியூமி இரோசா ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு வலுவிழப்புடன்கூடிய நபர்களுக்கு முன்னெடுக்க வேண்டிய சமூதாயம் சார் உட்படுத்தல் வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமளித்தனர்.
 
இச்செயலமர்வில் செயற்றிட்ட இணைப்பாளர் டபிளியூ.ஏ.கிஸ்சாந், வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.சவுந்தராஜன், பொலிஸ் உத்தியோகத்தர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், விதாதா தொழில்நுட்ப உத்தியோகத்தர், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர், வலுவிழப்புடன் கூடிய அமைப்புக்களின் தலைவர்கள், கல்விச் சேவை உத்தியோகத்தர்கள், சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts