கல்வி | கல்வி | 2021-02-16 16:29:50

மருதமுனை ஹிக்மாவில்  முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 


(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

தேசிய கல்விக் கொள்கைகளுக்கு அமைய முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகள் கல்வியமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய தற்போது நாடுபூராகவும் நடைபெற்று வருகின்றன.

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல்-ஹக்மா ஜூpனியர் பாடசாலையில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வித்தியாரம்ப நிகழ்வு சுகாதார விதிமுறைகளுக்கு அமைய பாடசாலையின் அதிபர் எம்.எல்.ஏ.மஹ்றூப் தலைமையில்  (15) நடைபெற்றது.

இதன்போது முதலாம் தர மாணவர்களை தற்போது இரண்டாம் தரம் கல்வி பயிலும் மாணவர்களால் மாலை அணிவித்து  பாடசாலைக்கு வரவேற்கப்பட்டனர்.

'ஒரு நாற்று – பத்து நோக்கங்கள்' தேசிய மாணவர் மரம் நடுகை வேலைத்திட்டத்திற்கு அமைய பாடசாலை வளாகத்தில் பழமரக்கன்றுகளும் அதிதிகளால் நாட்டிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மருதமுஐனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபர் ஏ.எல்.சக்காப் உட்பட ஓய்வு பெற்ற அதிபர்கள், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர்  கலந்து சிறப்பித்தனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts