பிராந்தியம் | அரசியல் | 2021-02-04 22:56:33

காரைதீவு பிரதேச சபையில் நடந்த சுதந்திர தின விழாவில் மக்கள் பிரதிநிகளுக்கு அழைப்பில்லை !

(நூருல் ஹுதா உமர்) 

 73 வது சுதந்திர தின விழா காரைதீவு பிரதேச சபையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை செயலாளர் உட்பட பிரதேச சபை காரியாலய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டு விழா நடைபெற்றதுடன் சுதந்திர தின விழா நினைவாக மரக்கன்றுகளும் நடப்பட்டது.

12 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் காரைதீவு பிரதேச சபையிலிருந்து இந்நிகழ்வில் தவிசாளர் கி. ஜெயசிறில் மாத்திரமே மக்கள் பிரதிநிதியாக கலந்துகொண்டிருந்ததுடன் வேறு எந்த மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருக்கவில்லை. இது தொடர்பில் எங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என ஏனைய உறுப்பினர்கள் விசனம் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தவிசாளர் கி. ஜெயசிறிலிடம் வினவியபோது தனக்கும் இது தொடர்பில் தெரியாது என்றும். சபையின் செயலாளர் அவசர அழைப்பொன்றை ஏற்படுத்தி அரசினால் அனுப்பப்பட்ட சுற்றுநிரூபத்தை அடிப்படையாக கொண்டு தான் சுதந்திர தின விழா ஏற்பாட்டை செய்துள்ளதாகவும் என்னை கலந்துகொள்ளுமாறும் அழைத்தார். நான் அங்கு சென்று பார்த்த பின்னரே கௌரவ உறுப்பினர்கள் யாரும் அழைக்கப்படாத செய்தியை அறிந்தேன்.

 இது போல பல தடவைகள் நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் நான் அவருக்கு  இவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் உறுப்பினர்களுக்கு அறிவியுங்கள் என்றும் சபை அனுமதிக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தியிருந்தேன். ஆனால் அவைகள் ஒன்றும் இங்கு பின்பற்றப்பட வில்லை என்பது கவலையளிக்கிறது என்றார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts