பிராந்தியம் | சமூக வாழ்வு | 2021-02-04 15:43:33

மருதமுனயில் பறக்கத் டெக்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சமாதான புறாக்கள் பறக்கவிட்டு 73வது சுதந்திர தின நிகழ்வுகள்.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்,பி.எம்.எம்.ஏ.காதர், றாசிக் நபாயிஸ்) 


நாட்டின் தேசிய சுதந்திரத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூர்ந்து சமாதான புறாக்கள் பறக்கவிட்டு மருதமுனையில் 73 வது சுதந்திரதின நிகழ்வுகள் இன்று (04.02.2021) நடைபெற்றன.

மருதமுனை பறக்கத் டெக்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஓய்வுபெற்ற காணிப்பதிவாளர் முசத்திக் ஜெ.முகம்மட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பறக்கத் டெக்ஸ் முகாமையாளர் எம்.ஐ.எம்.பரீட் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார். இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல்துறைத் தலைவர் கலாநிதி எம்.எம்.பாஸில் சுதந்திர தினம் தொடர்பான விசேட உரையை நிகழ்த்தினார்.

நாட்டின் தேசிய சுதந்திரத்துக்காக போராடி உயிர் தியாகம் செய்த மருதமுனை மகன் அனீஸ் லெப்பை உட்பட சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள், இராணுவ படைப்பிரிவினர் என அனைவரும் இங்கு நினைவுகூறப்பட்டதுடன் சமாதானம், சுபீட்சம் வேண்டி சமாதான புறாக்களும் பறக்கவிடப்பட்டன.

பிரதேசத்தின் உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts