பிராந்தியம் | பொருளாதாரம் | 2021-01-30 08:51:35

அரசாங்கத்தினால் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்ற நிதிகள் உரிய நோக்கத்திற்காக மாத்திரமே செலவு செய்யப்பட வேண்டும் – கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் தெரிவிப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)  

அரசாங்கம் பொதுமக்களுக்கு எந்த நோக்கத்திற்காக நிதிகளை வழங்குகின்றதோ அந்த நோக்கத்திற்கு மாத்திரமே உரிய நிதிகளை செலவு செய்ய வேண்டும் என கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தெரிவித்தார்.

வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் சமூர்த்தி திணைக்களத்தின் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனையில் முதலாவது வீட்டிற்கு  அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வு மருதமுனை - நட்பிட்டிமுனை சமூர்த்தி வங்கி முகாமையாளர் சட்டத்தரணி எம். எம்.எம். முபீன் தலைமையில் இன்று (29) பெரியநீலாவணை தமிழ் - முஸ்லிம் பிரிவில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே பிரதேச செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்த வீட்டுத் திட்டத்திற்கென  அரசாங்கம் ஒரு வீட்டுக்கு 6 இலட்சம் ரூபா நிதியினை பயனாளிகளுக்கு வழங்குகின்றது. மீதமான 4 லட்சம் ரூபாவினை பயனாளிகள் செலவு செய்து குறுகிய காலத்துக்குள் வீட்டை நிர்மாணிக்க வேண்டும்.  அரசாங்கத்தின் நிதி எந்த நோக்கத்திற்காக ஒதுக்கீடு செய்யப் படுகின்றதோ அந்த நோக்கத்திற்கு மாத்திரமே செலவு செய்யப்பட வேண்டும்.  ஆனால் இன்று அதிகமானவர்கள் அரசாங்கத்தின் நிதியை எடுக்கும் வரைக்கும் சரி என  சொல்லிவிட்டு பின்னர் நிதி போதாது  எனக்கூறி வேலைத்திட்டங்களை பூரணப் படுத்தாமல் விடுகின்றனர். இது பிழையான செயற்பாடாகும். அரசாங்க சேவையிலுள்ள நாம் அரசாங்கத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும். நாட்டில் பொருளாதார, சுகாதார ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை அரசாங்கம் எதிர்கொண்டு இருக்கின்றது. இவ்வாறான ஒரு சூழலில் நாட்டிலுள்ள 335 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பொதுமக்களாகிய உங்களின் நலனைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் வீடு கட்டுவதற்காக இந்த நிதிகளை வழங்கியுள்ளது. என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எமது கல்முனை பிரதேசத்தில் கட்டப்படுகின்ற வீடு ஏனைய பிரதேசங்களுக்கும் முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதேச செயலகத்தின் கணக்காளர் வை. கபீபுல்லா, தலைமைப் பீட சமூர்த்தி முகாமையாளர் ஏ. ஆர். எம். சாலிஹ், பிரிவுக்கு பொறுப்பான சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். நவ்ஷாத், உட்பட திணைக்களத்தின் அதிகாரிகள், கிராம மட்டத்தில் பணியாற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், பட்டதாரி பயிலுனர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts