பிராந்தியம் | சமூக வாழ்வு | 2021-01-24 15:50:58

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் சுகிர்தராஜனின் 15வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு காரைதீவில்.

(றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்)

அம்பாறை மாவட்ட வீரமுனை கிராமத்தை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு மாவட்ட குருக்கள்மடம் கிராமத்தை வசிப்பிடமாகவும் திருகோணமலை துறைமுக அதிகார சபையின் உத்தியோகத்தராகவும் இருந்த

சிரேஷ்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்கள் 2006.01.24ஆம் திகதி திருகோணமலையில் வைத்து தனது ஊடகப்பணி நேரத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

அன்னாரின் 15வது ஆண்டு  ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (24)  கிழக்கு தமிழ் ஊடக ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு மாவட்ட ஊடக சம்மேளனத்தின் தலைவர் ரா.கிருஷ்ண குமார் தலைமையில் காரைதீவில் அமைந்துள்ள அம்பாறை ஊடக மையத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் அமரர் சுகிர்தராஜனின் படத்துக்கு சிரேஷ்ட ஊடகவியலாளரும் உதவிக் கல்விப்பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா மற்றும் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கே.ஜெயசிரில் இருவரும் இணைந்து மலர் மாலை அணிவித்துடன் படத்துக்கு பூத்தூவி சுடர் ஒளி களையும் ஏற்றி தனது அஞ்சலிகளைச் செலுத்தினார்கள்.

இதன் போது அமரர் அவர்கள் பற்றிய சிறப்பு நினைவுரையை  விஷேட அதிதியாக கலந்து கொண்ட காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கே.ஜெயசிரில் நிகழ்த்தினார். 

இதன் போது தொடர்ந்து உரையாற்றுகையில்.

ஊடகவியலாளர்களும் அவர்களது குடும்பங்களும் நீதியை நாடினாலும் இந்த நாட்டில் நீதி கிடைக்காமல் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். 

மறைந்தும் மறையாமல் பயணிப்பவர்கள் ஊடகவியலாளர்கள். இவர்கள் தூர நோக்கு கொண்டவர்கள். ஊடகம் என்பது நிதி, நீதிக்கு அப்பால் ஊடகம் சுதந்திரமாக இருந்தால் நாடு சுதந்திரமாக இருக்கும்.

அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் சார்பான நினைவுரையை ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார். 

இதில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி ரியாத் ஏ.மஜீத், வெற்றிரிப் நியூஸ் நிறுவப் பணிப்பாளர் எஸ்.நடனசபேசன், தமிழ் சி.என்.என். கிழக்கு மாகாண இணைப்பாளர் லோ.கஜரூபன், தமிழ் சி.என்.என். காரைதீவு பிரதேச உறுப்பினர் மகாதேவா தனுசியன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts