உள்நாடு | சமூக வாழ்வு | 2020-12-18 17:32:01

மாளிகைக்காட்டில் சிறு துளிக்கே பொங்கியெழுந்த வீதி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் கல்முனை யில் உள்ள கட்டிடங்களில் கைவைக்க அச்சப்படுவது ஏன்?

(ஹுதா உமர்)

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி திணைக்கள கல்முனை காரியாலயத்திற்கு பக்கத்தில் உள்ள யாட் வீதியில் அமைந்துள்ள நீர்ப்பாசன திணைக்களம், பிராந்திய நீர்ப்பாசன பொறியலாளர் காரியாலயம், கட்டிடங்கள் திணைக்களம், போன்ற அரச காரியாலயங்களும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் வீட்டுத்திட்டம் அமைந்துள்ள பாதையான யாட் வீதி அண்மையில் கொங்கிறீட் இட்டு அழகாக போடப்பட்டுள்ளது.

இந்த யாட் வீதியில் அமைந்துள்ள நீர்ப்பாசன திணைக்களம், பிராந்திய நீர்ப்பாசன பொறியலாளர் காரியாலயம் ஆகிய காரியாலயங்களை ஒட்டியதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை வீதியை மரித்து கட்ட அனுமதி வழங்கியது யார்? அந்த கட்டிடம் கட்டியது அரச அதிகாரிகளுக்கு தெரியுமா? மாளிகைக்காட்டில் 01 மீட்டர் நிர்மாணம் செய்ததையே உடைத்த வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இந்த கட்டிடம் தொடர்பில் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன?

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள கர்மேல் பாத்திமா கல்லூரிக்கு அண்மையில் அமைந்துள்ள வீதியை வளைத்து கம்பி வேலிகள் போடப்பட்டு பூக்கண்டுகள் நடப்பட்டுள்ளது. மட்டுமின்றி கடைகளும் கட்டப்பட்டுள்ளது. இது எவ்வையில் உள்ள நியாயம்? இந்த விடயங்கள் தொடர்பில் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன?

இது போன்று பல சட்டவிரோத கட்டிடங்கள் இந்த பிரதேசங்கள் முழுவதிலும் பரவி இருக்கின்றது. இல்லை எல்லாம் சட்டப்படியே அமைக்கப்பட்டிருக்கின்றது என்றால் அதை மக்களுக்கு பகிரங்கப்படுத்த உரிய அதிகாரிகள் முன்வரவேண்டும். இந்த விடயத்தை வேறு திசையில் திருப்பி இனவாத காரியமாக மாற்ற விடாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும்


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts