உள்நாடு | சமூக வாழ்வு | 2020-12-18 17:19:26

அக்கரைப்பற்று மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு வெற்றி : எதிராக 01 வாக்கு மட்டுமே !

(ஹுதா உமர்)

அக்கரைப்பற்று மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று (18) காலை அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸக்கி அவர்களினால் இவ்வரவு செலவு அறிக்கையை சபையில் சமர்ப்பித்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. வாக்கெடுப்பில் தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். எதிராக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவர் மாத்திரமே வாக்களித்தார். இதனால் 17 வாக்குகள் ஆதரவாகவும் எதிராக 01 வாக்கும் பதிவானது.

20 உறுப்பினர்களை கொண்ட அக்கரைப்பற்று மாநகர சபையில் இன்று காலை மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸக்கி தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்ற அமர்வில் 18 உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டதுடன் ஏனைய இருவரும் கொரோனா தொற்றின் காரணமாக முடக்கப்பட்ட பகுதிகளில் சிக்கிக்கொண்டதனால் சபை அமர்வில் கலந்துகொள்ள வில்லை என மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸக்கி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தார். இருந்த போதிலும் அவர்களும் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுக்கு ஆதரவு தெரிவித்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts