உள்நாடு | சமூக வாழ்வு | 2020-12-15 14:42:36

கொரோனா தொற்றில் இறந்த ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியுங்கள் : அரசாங்கத்திடம் பிரதேசசபை உறுப்பினர் க.குமாரசிறி வேண்டுகோள்.

(ஹுதா உமர்)

தற்போது நாட்டில் கொரோனா தொற்றுக்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக சுகாதார பிரிவினர் வழங்குகின்ற அறிவுறுத்தல்களை ஏற்று பொதுமக்கள் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்வதுடன் காரைதீவு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் அண்மை நாட்களாக தொடர்ச்சியாக இனங்காணப்பட்டு வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் எமது பிரதேசம் அபாய வலயமாகவும் குறிப்பிடப்படும். இதனால் அன்றாட தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே எங்களை நாங்களே காப்பாற்றிக்கொள்ளும் பொறிமுறையினை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். எனவேதான் சுகாதார துறையினர் விடுக்கின்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எமது காரைதீவு பிரதேசத்தை கொரோனா தொற்றியிருந்தது காப்பாற்றுவதற்கு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் க.குமாரசிறி மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

காரைதீவின் சமீபத்தைய நாட்களின் நிலவரம் தொடர்பில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தற்போது கொரோனா தொற்றினால் உயிரிழக்கின்ற முஸ்லிம் மக்களின் ஜனாசாக்களை தகனம் செய்கின்ற விடயமானது அம்மக்களிடையே மட்டுமின்றி சகல இன மக்களிடமும் பாரிய வேதனையை உருவாக்கியிருக்கின்றது. இவ்விடயம் அவர்களின் மதரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். எனவே இந்த ஜனாசாக்களை தகனம் செய்கின்ற விடயத்தை தவிர்த்து அந்த உடல்களை அவர்களின் மதரீதியாக அடக்கம் செய்கின்ற வகையில் அரசாங்கம் நல்லதொரு முடிவினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என இந்த அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts