பிராந்தியம் | சமூக வாழ்வு | 2020-12-13 15:07:12

தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மக்களின் பாதுகாப்பையும், அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் முறைகள் தொடர்பிலும் கலந்துரையாடல்

(றாசிக் நபாயிஸ்)

அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்காவின் அறிவுறுத்தலுக்கமைவாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மக்களின் பாதுகாப்பையும், அவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் வழி முறைகள் தொடர்பிலும் கள உத்தியோகத்தர்களுடன் ஆராயும் கலந்துரையாடல் கூட்டம் இன்று (2020/12/13) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் நடைபெற்ற இக்லந்துரையாடல் கூட்டத்தில் கிராம சேவை அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அக்கறைப்பற்று பொதுச்சந்தைத் தொகுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக கடந்த மாதம் 26ம் திகதி தொடக்கம் அக்கறைப்பற்றுப் பொலிஸ் பிரிவிலுள்ள அக்கறைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் 18வது நாளாகவும் அமுலில் உள்ளது.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மக்கள் வீடுகளில் இருந்து தேவையில்லாமல் வெளியேறுவதைத் தடுப்பதுடன், சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுவதற்கான அறிவறுத்தல்களை கள உத்தியோகத்தர்கள் ஒன்றினைந்து மேற்கொள்வதென இங்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள்

பி.சி.ஆர்.பரிசோதனையை மேற்கொண்டு சுகாதார வைத்திய அதிகாரியின் சுகாதார நற்சான்றிதழை பெற்றுள்ளார்களா? என்பதனையும் அவதானித்துச் செயற்படுமாறும் இங்கு பிரதேச செயலாளர் வேண்டிக் கொண்டார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts