பிராந்தியம் | கல்வி | 2020-12-03 20:40:11

நிந்தவூரை சேர்ந்த  பிரதி அதிபரான MHM. அபூபக்கர் அவர்கள் அதிபர் சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு.

(யாக்கூப் பஹாத்)


கல்முனை ஸாஹிராக்  கல்லூரியின் பிரதி அதிபராக கடமை புரியும் ஜனாப் MHM. அபூபக்கர் அவர்கள் இலங்கை அதிபர் சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலை பட்டதாரியானா இவர் பட்ட பின் கல்வி டிப்ளோமா , ஆங்கில பாட நெறி டிப்ளோமா போன்ற பாட நெறிகளையும் பூர்த்தி செய்துள்ளார். 

கமு/அல்- அஷ்றக் தேசிய பாடசாலையில் 1988-12-23 ஆம் திகதி பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்ட இவர் 2012-10-03 ஆம் திகதி இலங்கை அதிபர் சேவையின் 2ஆம் தரத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். மேலும்  கமு/அல்- அஷ்றக் தேசிய பாடசாலையில் 2015-08-30 திகதி வரை உதவி அதிபராக கடமையாற்றினார்.பின்னர் 2015-09-01ஆம் திகதி தொடக்கம் தற்பொழுது வரை கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபராக ( Deputy principal ) ஆக கடமை ஆற்றி வருகின்றார்.

தனது 33 வருட சேவையை 28 வருடங்கள் நிந்தவூர் அல்- அஷ்றக் தேசிய பாடசாலையிலும், மிகுதி 5 வருடங்களை கல்முனை ஸாஹிராக் கல்லூரியிலும் பூர்த்தி செய்த  இவர் ஒரு சிறந்த ஆளுமை கொண்ட அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts