பிராந்தியம் | சமூக வாழ்வு | 2020-12-03 20:26:44

கல்முனை பொலிஸாரால் முச்சக்கர வண்டிகள் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.  

(ஏ.எல்.எம். ஷினாஸ்)            

அம்பாறை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கல்முனை பொலிஸ் நிலையத்தின் மோட்டார் வாகன பிரிவு மற்றும் சமூக பாதுகாப்பு பிரிவு என்பன ஒன்றிணைந்து முச்சக்கர வண்டிகளை விசேட சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை இன்று (03) கல்முனை நகரில் நடைபெற்றது.

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் கொரோனா தொற்றுநோய் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு ஆலோசனை வழங்கியதுடன் 'மீற்றரான வாழ்க்கை' எனம் விழிப்புணர்வு ஸ்டிக்கர் களும் முச்சக்கர வண்டிகளில் ஒட்டப்பட்டன.

அத்தியவசிய போக்குவரத்துகளை மாத்திரம் மேற்கொள்ளல், முகக் கவசம் அணிதல், கைகளை சுத்தமாக கழுவுதல், ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பேணுதல் போன்ற சுகாதார விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டதோடு அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு  எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை  எடுக்கப்படும்  என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts