![]() |
கல்வி பொதுத்தராதர பரீட்சையை மேலும் தாமதப்படுத்தாமல் எதிர்வரும் மார்ச் மாதம் நடத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்
மார்ச் மாதம் பரீட்சையை நடத்தி மூன்று மாதங்களில் அதன் பெறுபேறுகளையும் வெளியிடவுள்ளதாகவும் ஜுலை மாதம் இந்த மாணவர்கள் உயர்தர வகுப்புக்களுக்கு இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.