உள்நாடு | கல்வி | 2020-06-29 15:23:09

2019 O/L மீள் திருத்த விண்ணப்பங்களை ஜூலை 17 இற்கு முன் அனுப்பவும்

2019 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்திருத்த விண்ணப்பங்களை ஜூலை 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், பீ. சனத் பூஜித இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி வெளியிடப்பட்ட இப்பெறுபேறுகள் தொடர்பில், மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை, பதிவுத் தபாலில் அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மாதிரி விண்ணப்பப்படிவங்கள், கடந்த வெள்ளிக்கிழமை (26) வெளியான பத்திரிகைகளிலும், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறித்த விண்ணப்பத்தை முழுமைப்படுத்தி அனுப்பி வைக்குமாறும், அவர் கேட்டுள்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் ஏதேனும் தகவல்கள் அவசியமாயின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை பரீட்சைகள் பிரிவு
0112785231/ 0112785216
0112784037
அவசர தொலைபேசி இலக்கம் - 1911


Related Posts

Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

Popular Posts