கல்வி | இஸ்லாம் | 2020-06-29 10:51:27

மத்ரஸாக்கள் ஜூலை 08 முதல் மீள திறப்பதற்கு தீர்மானம்

கொவிட் 19 சூழல் காரணமாக மூடப்பட்டிருந்த அரபு மத்ரஸாக்களை ஜூலை 08 ஆம் திகதி முதல் மீளத் திறப்பதற்கு இலங்கை அரபுக் கல்லூரிகள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ஜஃபர் ரஹ்மானீ தெரிவித்தார்.

ஜூலை 06 ஆம் திகதி கல்வி நிறுவனங்களை மீளத்திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதனால் அரபுக் கல்லூரிகளை 08 ஆம் திகதி திறக்கலாம் எனவும், கல்வி சார் ஊழியர்கள் 06 ஆம் திகதி கல்லூரிகளுக்குச் சமுகமளித்து உரிய ஆயத்தங்களைச் செய்ய வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக இறுதியாண்டு மாணவர்கள் மாத்திரம் உள்வாங்கப்படுவர். சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டல்களைச் செயற்படுத்தும் விதமாக ஹஜ் விடுமுறை வரை ஒத்திகை பார்த்து குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு, ஹஜ் விடுமுறைக்குப் பின்னர் பிரதேசங்களின் களநிலவரத்துக்கு ஏற்ப ஏனைய மாணவர்களை உள்வாங்குவது எனவும் தீர்மானமாகியுள்ளது.

கல்லூரிகளை ஆரம்பிக்க முன்னர் பிரதேச பொதுச் சுகாதார அதிகாரியின் எழுத்து மூலமான அனுமதியைப் பெற்று அவர்களது வழிகாட்டல்களையும் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் வழிகாட்டல்களையும் நடைமுறைப்படுத்தி மத்ரஸாக்கள் நடத்திச் செல்லப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


Related Posts

Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

Popular Posts