வெளிநாடு | பொருளாதாரம் | 2020-11-29 12:38:38

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் கடந்த வாரம் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய கடந்த வாரத்தில் 4.5 வீதம் வரை தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.

தங்கம் ஒரு பவுன்ஸின் விலை 1800 அமெரிக்க டொலர் வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த செப்டெம்பர் மாதத்தின் பின்னர் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு நிலையிலேயே காணப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் அவுன்ஸின் தங்கத்தின் விலை 2075 அமெரிக்க டொலர் வரை அதிகரித்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.

கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இந்தநிலையில் மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது.

ஆகவே தங்க ஆபரணங்கள் வாங்க எண்ணியுள்ளவர்களுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக தங்க விலை அமைந்துள்ளது.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts