உள்நாடு | சமூக வாழ்வு | 2020-11-25 22:18:38

சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலின் அலுவலக அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு.

(எம்.எஸ்.எம்.ஸாஹிர்,ஹுதா உமர்,எம்.என்.எம்.அப்ராஸ்)

பலவருடங்களாக கிழக்கு பிராந்திய கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக செயற்பட்டு வரும் சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலின் நிறைவேற்று சபை உறுப்பினர்களுக்கு அலுவலக அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு புதன்கிழமை இரவு மருதம் கலைக்கூடலின் சாய்ந்தமருது அலுவலகத்தில் அமைப்பின் தலைவர் கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானாவின் தலைமையில் நடைபெற்றது.

அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள், கொரோனா காலத்தில் கலைஞர்களின் நிலைகள் தொடர்பில் இந்நிகழ்வில் ஆராயப்பட்டதுடன் அண்மையில் காலமான இலக்கியவாதி கலைமகள் ஹிதாயா றிஸ்வி அவர்களுக்கான இரங்களும் நடைபெற்றது.

அடையாள அட்டை வழங்கும் இந்நிகழ்வுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.ஐ. அப்துல் ஜப்பார், ஊடக செயலாளர் கலைஞர் யூ.எல்.என். ஹுதா, வீதி அபிவிருத்தி அதிகார சபை தலைமை முகாமைத்துவ உதவியாளர் ஏ.சி.எம். நிசார், தொழிலதிபர் எம்.எச். நாஸர், அமைப்பின் பிரதித்தலைவர் கலைஞர் என்.எம். அலிகான், பிரதித்தலைவர் எம்.எச்.எம்.அலி றஜாய், அமைப்பின் செயலாளர் அறிவிப்பாளர் ஐ.ஜாபீர், கவிஞர் கே.எம்.எம்.ஏ. அஸீஸ் உட்பட ஆலோசகர்கள், உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் அமைப்பின் நிறைவேற்று சபை உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts