உள்நாடு | அரசியல் | 2020-11-24 18:22:27

றிஷாட் பதியுதீன் கைது அரசியல் பழிவாங்கள் அல்ல :ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் புர்க்கான்

ஐ.எல்.எம் நாஸிம் 

முன்னாள்அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களை கைது செய்து விளக்க மறியலில் வைத்திருக்கப்பட்டிருப்பதை எதிர்க்கட்சியில் உள்ள சிலர் அரசியல் பழிவாங்கள் என ஆளும் அரசின் மீது தவறான விமர்சனங்களை செய்து வருகின்றனர். உண்மையில் அவரை பழிவாங்க வேண்டிய எந்த தேவையும் அரசாங்கத்திற்கு இல்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் எம்.சி அஹமட் புர்க்கான் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைது செய்தமை பற்றி ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையிலே - அண்மையில் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட  2021க்கான வரவு செலவு திட்டத்திற்கு  ஆதரவாக எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். தங்களுடைய கட்சித் தலைவரை பழிவாங்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஏன் ஆதரவு வழங்க வேண்டும் என்ற கேள்வி அவர்களுக்கு எழவில்லையா என நாம் கேட்க விரும்புகிறோம். 

 தங்களுடைய தலைவர் ரிஷாட் பதியுதின் அவர்களை பழிவாங்க வேண்டிய எண்ணம் ஆளும் அரசாங்கத்திற்கு இல்லை என்பதனை அவர்கள் திடமாக நம்புகின்றனர் அதன் காரணமாகவே அரசுக்கு ஆதரவாக தங்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதுமாத்திரமல்ல தேர்தல் காலங்களில் முஸ்லிம் மக்கள் மத்தியில் மக்கள் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் ஜனாதிபதி அவர்களையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் மிகவும் மோசமாக விமர்சனம் செய்தே பாராளுமன்றத்திற்கு தெரிவானார்கள் ஆனால் இன்று நிலமை வேறுவிதமாக மாறியுள்ளதை முஸ்லிம்கள் அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள் ஆளும் தரப்பிற்கு ஆதரவாக செயல் பட்ட எம்மை அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் விரோதிகள் என பிரச்சாரம் செய்தனர். ஆனால் இன்று அவர்களுடைய தற்கால செயல் பாட்டின் மூலமாக உண்மையில் முஸ்லிம் சமூகத்தின் மீது அதிகம் அக்கறை கொண்டவர்கள் யார் என்பதை தெளிவு படுத்தியும் உள்ளனர்.

நிலையற்ற தங்களுடைய கொள்கை வெளிப்பாட்டினால் இன்று மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் அவரது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் தனிமைப்படடுத்தப்பட்டுள்ளார் அதே நிலைதான் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே முஸ்லிம் சமூகம் வேடதாரிகள் யார் என்பதை இனம் கண்டுள்ளனர் என தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts