உள்நாடு | அரசியல் | 2020-11-21 09:24:08

றிஷாத் பதியுதீனின் மர  நடுகைக்கு 100,000/= வழங்கத் தயார் - உலமா கட்சித் தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

முன்னாள் அமைச்சர்  ரிஷாத் ப‌தியுதீனின் ம‌ர‌ ந‌டுகைக்காக‌ 50 கோடி கொடுக்க‌ வேண்டும் என‌ வ‌ன‌ இலாக்கா தெரிவித்துள்ள‌து. அது நியாய‌மான‌ தொகையா? என்ப‌தை நீதி ம‌ன்ற‌ம் தீர்மானிக்கும் என‌ எண்ணுகிறேன்.

அப்ப‌டித்தான் அத்தொகையை வ‌ழ‌ங்க‌ வேண்டும் என்று க‌ட்ட‌ளை வ‌ந்தால் ஒவ்வொரு முஸ்லிம் ஊரும் ஒன்று ப‌ட்டு இந்நிதியை திர‌ட்ட‌ வேண்டும். இத‌ற்கான‌ நிதிய‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டால் அத‌ற்கு நான் 1 ல‌ட்ச‌ம் ரூபா என் ப‌ங்கிற்கு வ‌ழ‌ங்க‌ த‌யாராக‌ உள்ளேன் என்று உலமா கட்சித் தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நான் சொல்வ‌து என‌து அர‌ச‌ ஆத‌ர‌வு  அர‌சிய‌லுக்கு பாத‌க‌மான‌து என்ற‌ போதும் வ‌ட‌ மாகாண‌ ம‌க்க‌ளுக்காக‌ அர்ப்ப‌ணிப்புட‌ன் செய‌ற்ப‌ட்ட‌ ம‌க்கள் காங்கிர‌ஸ் த‌லைவ‌ருக்கு உத‌வுவ‌து ஒவ்வொரு முஸ்லிமின‌தும் க‌ட‌மையாகும்.


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Popular Posts