உள்நாடு | குற்றம் | 2020-05-29 07:04:15

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சந்தேகத்தில் கைதான பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் ஜூன் 10 ஆம் திகதிவரை விளக்கமறியல்

(ஏ.புஹாது)

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சந்தேகத்தில் கைதான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார்.

சப்ரிகம வீதி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் உள்ள ஒப்பந்த வேலைகளை பெற்றுக்கொடுப்பதற்காக சுமார் 3 இலட்சம் லஞ்சமாகப் பெறப்பட்ட வேளையில் கொழும்பிலிருந்து வருகை தந்த விஷேட பிரிவினரே இவர்களைக் கைது செய்துள்ளனர். நேற்று நண்பகல் 12.30 மணியளவில் இக்கைது இடம்பெற்றது

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நேற்று (28) மாலை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்திற்குக் கொண்டுவந்த போதே இவ் உத்தரவை நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா பிறப்பித்தார்.


Related Posts

Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

GENERAL ELECTION-2020

Popular Posts