உள்நாடு | விளையாட்டு | 2020-10-06 20:03:07

சினேகபுர்வ கிறிக்கட் போட்டியில் சம்பியன் கிண்ணத்தை 1992 ஆம் ஆண்டின் ஸஹிரியன் பழைய மாணவர் அணி சுவீகரித்தது.

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர்களை கல்லூரியின் அபிவிருத்தி செயற்பாடுகளில் ஒன்றிணைத்து செயற்படுத்தும் திட்டத்தின் கீழ் 1990 ஆம் மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் க.பொ.த.உயர்தர வகுப்புகளில் கல்வி கற்று நாட்டின் பல பகுதிகளிலும் பல உயர்பதவிகளை வகிக்கும்  பழைய மாணவர்களுக்கிடையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை சினேகபுர்வ கிறிக்கட் சுற்றுப் போட்டியொன்று  கல்லூரி மைதானத்தில்  ஒழுங்கு செய்ப்பட்டிருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற 1990 ஆம் ஆண்டு அணியினர் 10 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 91 ஓட்டங்களையப் பெற்றனர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 1992 ஆம் ஆண்டு அணியினர் 9.3 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 92 ஓட்டங்களைப்பெற்று 8 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றனர் .

கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.ஜாபிர்  32 ஓட்டங்களைப்பெற்று தனது அணியின் வெற்றிக்கு வழிகோலியதோடு சிறப்பாட்டக்காரர் விருதினையும் பெற்றார்


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்