உள்நாடு | சமூக வாழ்வு | 2020-09-26 09:58:30

இசையின் அலை ஓய்ந்தாலும் நினைவுகள் எல்லோர் மனதிலும் ஒலிக்கும் : பத்மவிபூஷண் எஸ்.பி பாலசுப்ரமணியமுக்கு மீஸான் அஞ்சலி

(ஹுதா உமர்)

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தன்னடக்கம், போன்ற பல உயரிய குணாதிசயங்களுக்கு சொந்தக்காரனாக இருந்த பத்மவிபூஷண் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் இழப்பு இசையின் நேசர்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். என அல்- மீஸான் பௌண்டஷன்- ஸ்ரீலங்கா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் இரங்கல் செய்தியில் மேலும் 1946 இல் பிறந்த பத்மவிபூஷண் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் தனது இறுதி மூச்சி முடியும்வரை 17 மொழிகளில் 41 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார் என்பது சாதாரண விடயமல்ல. மிகப்பெரும் சாதனைகளுக்கு சொந்தக்காரனாக அந்த உலகப்பாடகன் ஆறு தடவைகள் தேசிய விருதையும் ஏழு தடவைகள் பிலிம்பேர் விருதுகளையும் வாங்கி அந்த விருதுகளுக்கே கௌரவம் சேர்த்துள்ளார் என்பது நிதர்சனமான உண்மை.

கொரோனாவின் பிடியில் தத்தளித்து தன்னுடைய ரசிகர்களின் சோக கண்ணீரில் இறைபாதமடைந்த அன்னாருரின் நினைவுகள் உலகின் பரப்பில் காற்றிருக்கும் வரை தொடரும். தன்னுடைய உருவத்தை போலவே மனதையும் பெரிதாக கொண்ட பாடும் நிலா பத்மவிபூஷண் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் இழப்பு இசை உலகுக்கு ஈடு செய்யமுடியா துயரம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts