உள்நாடு | சமூக வாழ்வு | 2020-09-24 08:27:09

கல்முனை ஜெமீல் வைத்தியசாலையில் 10,000 வது குழந்தை பிரசவிக்கப்பட்டது : கேக் வெட்டி கொண்டாடிய வைத்தியர்கள்.

(எம்.எம்.ஜெஸ்மின்,ஹுதா உமர்)

டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் 35 வருட சேவையின் 10,000வது குழந்தை நேற்று (22) வெற்றிகரமாக பிரசவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஒட்டி நடைபெற்ற வைபவத்தில் அதிதிகளாக மகப்பேற்று பெண் நோயியல் வைத்திய நிபுணர்களான டாக்டர்.றஸீன் மொகமட் மற்றும் டாக்டர். ராஜீவ் விதானகே உட்பட மேலும் பல விசேட வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

டாக்டர் . ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நிதி மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எம். எஸ். எம். நஜீம்டீன் கருத்து தெரிவிக்கையில், காலம் சென்ற மகப்பேற்று பெண் நோயியல் வைத்திய கலாநிதி எ.எல்.எம். ஜெமீல் அவர்களின் சேவை காலம் முதல் இன்று வரையான காலப் பகுதியில் கடமை ஆற்றிய சகல துறை சார் வைத்திய நிபுணர்களுக்கும் மேலும் இந்த நிகழ்வில் பங்குகொண்ட ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் தனது வைத்தியசாலை சார்பாகவும் அதன் தலைவர் டாக்டர் றிஸான் ஜெமீல் சார்பாகாவும் நன்றிகளை தெரிவித்தார்.

டாக்டர் . ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் Cystocopy, Laproscopy, CT Scan, போன்ற மேலும் பல விசேட நவீன வைத்திய வசதிகளை விரைவில் ஏற்படுத்திக் கொடுக்கப்போவதாகவும் அதன் நிதி மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நஜீம்டீன் தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts